டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றுமொரு மைல்கல்… இன்றைய போட்டியில் அஸ்வின் படைத்த சாதனை!

வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நாக்பூர் மைதானத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 8 விக்கெட்களை கைப்பற்றினார் அஸ்வின். இதன் மூலம் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்த போட்டியில் 3 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள அவர் ஆஸி அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு அனில் கும்ப்ளே மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்