IND-ENG 3-வது டெஸ்ட் போட்டி - இந்திய வீரர் அஸ்வின் சாதனை !
வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:40 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் அணியும் இரண்டாவது அணியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.
மூன்றாவது டெஸ்ட் உலகில் மிகப்பெரிய மைதானமான குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
இதில் இங்கிலாந்து அணி திணறிவருகிறது. தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவைவிட 50 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய வீரர் அஸ்வின் 400 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் கும்ளே(619 விக்கெட்டுகள்), ஹர்பஜன்(434 விக்கெட்டுகள்) கபில்தேவ்( 417 விக்கெட்டுகள்) வீழ்த்தியுள்ளனர்.
இதையடுத்து தற்போது அஸ்வின் 77 மேட்சுகளில் விளையாடி 400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.