இந்தியா முழுவதும் கிரிக்கெட் பல கோடி ரசிகர்களை பெற்றிருந்தாலும் ஒலிம்பிக் அளவுக்கு உலக புகழ் பெற்றதாக அது இல்லை. பலவிதமான விளையாட்டுகளின் சங்கமமாக திகழும் ஒலிம்பிக் போட்டியை காணவும், பங்கு பெறவும் உலகத்தின் பல நாடுகளும் போட்டி போடுகின்றன. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது ஒரு இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவர் மைக் கேட்டிங் “ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஒலிம்பிக் போட்டிகள் இரண்டு வாரங்களே நடைபெறும் என்பதால் அதற்கு ஏற்றவாறு திட்டமிட வேண்டிய சிக்கல்கள் உள்ளது. கிரிக்கெட் நீடித்து இருக்க அது ஒலிம்பிக்கில் இடம் பெற்றாக வேண்டும்” என கூறியுள்ளார்.