இந்திய அணியில் மிடில் ஆர்டர் வலுவாக இல்லை என பல விமர்சகர்கள் விமர்சித்த நிலையில், புதிதாக களம் இறக்கப்பட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான தகுதிகளுடன் சிறப்பான ஆட்டத்தை தந்தார் ஷ்ரேயாஸ். கோலியுடன் பார்ட்னர்ஷிப் வைத்து ஆடிய ஷ்ரேயாஸ் 68 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார். கோஹ்லி 125 பந்துகளில் 120 ரன்கள் அடித்தார்.
கோஹ்லி-ஷ்ரேயாஸின் பார்ட்னர்ஷிப் நேற்றைய இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது. ஷ்ரேயாஸின் இந்த அதிரடி ஆட்டம், இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலிமை பெற்றுள்ளதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.