விரைவில் கிரிக்கெட்டிற்கு திரும்புவேன்: சர்ச்சை மன்னன் ஸ்ரீசாந்த்

செவ்வாய், 5 ஜூலை 2016 (12:02 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்(33)  கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டார்.  இதை அடுத்து கடந்த ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இருந்தபோதும்,  பிசிசிஐ, அவர் கிரிக்கெட் விளையாட விதித்திருக்கும் தடையை இன்னும் நீக்கவில்லை.



இந்நிலையில் ஸ்ரீசாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”மீண்டும் நான் கிரிக்கெட் விளையாடுவேன் என உறுதியளிக்கிறேன், எப்பொழுதும், எதற்காகவும் என் கனவை விட்டு கொடுக்க மாட்டேன், யாருடைய ஆதரவும் எனக்கு இல்லை, ஆனால் இறைவன் இருக்கிறார். இறைவன் மிக உயர்ந்தவர், இது அனைத்தும் காலத்தை பொறுத்தே உள்ளது, ஆறு மாத தீவிர பயிற்சிக்கு பின்னர், நான் என்னுடைய பழைய நிலைக்கு திரும்புவேன் என அனைவரிடத்திலும் சத்தியம் செய்கிறேன். என்னை விமர்சித்தவர்களுக்கு ஒரு குறிப்பு, நான் கிரிக்கெட் விளையாட்டிற்கு எந்த கெடுதலும் செய்யவில்லை, நான் யாரையும் ஏமாற்றவில்லை, அவ்வாறாக நான் சித்தரிக்கப்பட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்