ஓய்வு குறித்த கேள்வி: திகைத்து போன மிதாலி ராஜ்!

திங்கள், 28 மார்ச் 2022 (15:08 IST)
எனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் தேவை என இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பேட்டி. 

 
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோற்றது. இதனால் அரை இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் எனில் இந்திய அணி கனவாகவே போனது. 
 
இதனைத்தொடர்ந்து இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, நாங்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அது நடக்கவில்லை. அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் போனது எங்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
 
எதிர்காலத்தைப் பற்றி நான் அதிகம் திட்டமிடவில்லை. எனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் தேவை. எனது ஓய்வு முடிவு குறித்து அறிவிக்க இது சரியான நேரமாக இருக்காது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்