உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் போட்டியிட்டன. இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க வேண்டுமென்றும் பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
அதன் முன்னோட்டமாக ஹர்திக் பாண்ட்யா, நியுசிலாந்து தொடருக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் கழுத்து வலி காரணமாக அவரால் பந்துவீச முடியவில்லை. இதனால் தீபக் ஹூடா பந்துவீசி அசத்தினார்.