சர்பராஸ் கானுக்கு டான் ப்ராட்மேனின் அட்வைஸை கூறிய சுனில் கவாஸ்கர்!

vinoth

சனி, 9 மார்ச் 2024 (07:55 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து ஆடி வரும் இந்திய அணி தற்போது வரை 8 விக்கெட்களை இழந்து 473 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் கில் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சதமடித்து அசத்தினர். அதே போல சிறப்பாக விளையாடிய சர்பராஸ் கான் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 56 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “சர்பராஸ் கான் அவுட்டான பந்து ஷாட் பிட்ச்சாக வந்தது. அதையடித்து அவுட் ஆனார். தேனீர் இடைவேளை முடிந்த முதல் பந்தில் அந்த ஷாட் தேவையில்லாதது. அவருக்கு நான் பிராட்மேன் எனக்கு சொன்ன அறிவுரை ஒன்றை சொல்வேன். நாம் எத்தனை ரன்கள் அடித்திருந்தாலும் எதிர்கொள்ளும் பந்தை நாம் ஜீரோவில் இருப்பதாக நினைத்தே எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறினார். அதே போல சர்பராஸ் கானும் அவசரப்படாமல் ஆடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்