இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 34 ரன்கள் எடுத்திருந்தார். இந்த எளிய இலக்கை துரத்திய சி எஸ் கே அணி18 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்த சீசனில் முதல் தோல்வியை தழுவியுள்ளது கொல்கத்தா.
இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டனர். அப்போது சி எஸ் கே அணியின் மூத்த வீரரும், கொல்கத்தா அணியின் ஆலோசகர் கம்பீரும் சந்தித்துக்கொண்ட போது கைகுலுக்கிக் கொண்டு கட்டியணைத்து தழுவினர். கம்பீர் நீண்ட காலமாகவே தோனி மற்றும் கோலி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால் இந்த போட்டிக்கு முன்பாக தோனியை சிலாகித்து பேசியிருந்தார். இந்நிலையில் அவர்களின் இந்த சைகையானது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.