சச்சின் முதல் சுப்மன் கில் வரை..! வயசானாலும் வேகம் குறையல..! – 700 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

Prasanth Karthick

சனி, 9 மார்ச் 2024 (11:26 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையே நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆணடர்சன்.



இந்தியா – இங்கிலாந்து இடையே நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ள நிலையில் 5வது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதிலும் இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கிறது.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், ஜானி பேர்ஸ்டோவுக்கும் இது 100வது டெஸ்ட் போட்டி என்பது இந்த போட்டியின் ஒரு சிறப்பு என்றால், மற்றொரு சிறப்பு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 41 வயதாகும் ஜேம்ஸ் ஆணடர்சன் கடந்த 21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

40 தொடும்போதே பலரும் ரீட்டயர்மண்ட் அறிவிக்கும் நிலையில் தொடர்ந்து விளையாடி வரும் ஆண்டர்சன், கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் தொடங்கி, தோனி, கோலி, சுப்மன் கில் என இந்திய கிரிக்கெட்டின் மூன்று தலைமுறைகளின் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ALSO READ: 52 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து.. இன்னிங்ஸ் வெற்றி கன்பர்ம்?

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் வீழ்த்திய 2 விக்கெட்டுகளையும் சேர்த்து சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை அவர் படைத்துள்ளார்.

அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையில் 800 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரன் முதல் இடத்திலும், 708 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னே இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவதாக அதிக விக்கெட் வீழ்த்திய நபராக ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளார்.

இதில் முதல் இரண்டு இடத்தில் உள்ள முரளிதரனும், வார்னேவும் சுழற்பந்து வீச்சாளர்கள். இதனால் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்