19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான முதல் டி-20 போட்டி அட்டவணை வெளியீடு!

சனி, 17 செப்டம்பர் 2022 (22:27 IST)
தென்னாப்பிரிக்காவில், 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி-20 போட்டி  வரும் 2023 ஆம் ஆண்டில், ஜனவரி 14 ஆம் தேதி முதல்  ஜனவரி 29ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.  இந்தப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 41 போட்டிகளும் நடக்கவுள்ளன.

இதில் 4 குரூப்புகள் பிரிக்கப்பட்டுள்ளது, அதன்படி,  குரூப் 4, சூப்பர் 6, அரையிறுதி என்ற மூன்று சுற்றுகளாக இப்போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்திய மகளிர் அணி குரூப் –டி பிரிவில் இடம்பெற்றுள்ளதல், ஸ்காட்லாந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்