ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபகாலமாக அவர் பார்மில் இல்லாமல் ரன்கள் எடுக்க முடியாமல் சொதப்புவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு பதில் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது “செல்போன் எனது பக்கத்திலேயே உள்ளது. ஆஸி கிரிக்கெட் வாரியத்தில் இருந்து என்னை அழைத்தால் அதற்கு பதிலளிக்க ஆர்வமாக உள்ளேன். விரைவில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.