மழை காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 120 ரன்கள் குவித்தது. பின்னர், களமிறங்கிய இந்திய அணி விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டு நிதானமாக ஆடியது.
ஒரு கட்டத்தில் 5 ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. சராசரியாக ஓவர் ஒன்றிற்கு 10 ரன்கள் வீதம் தேவைப்பட்டது. 11ஆவது ஓவரில் இந்திய அணி 11 ரன்கள் எடுத்தது. 12ஆவது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள், தவான் ஒரு பவுண்டரி விளாச 15 ரன்கள் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், 14ஆவது ஓவரை அல்-அமின் வீச வந்தார். தோனி முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார். 4ஆவது பந்தில் ஒரு பவுண்டரி, ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸர் விளாசி வங்கதேச அணியின் கோப்பை கனவை தகர்த்தார்.