இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர், ஒருநாள், டி20, சாம்பியன் கோப்பை ஆகிய முத்தரப்பு கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த கேப்டன் ஆவார்.
இந்த நிலையில், நேற்று தோனியின் 42 வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறினர்.
இதையடுத்து, இன்று சமூக வலைதளத்தில் தோனி, தன் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார், மேலும், நேற்று தன் வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.