மலிக்கா போல சைடு வாக்கில் பந்து வீசும் அவரது ஸ்டைலுடன், விக்கெட்டுகள் வீழ்ந்ததும் நெஞ்சில் கை வைத்து, வானத்தை நோக்கி வேண்டுவது போன்ற அவரது உடல் மொழியும் பலரை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இளம் வீரரான பதீரனா பற்றி பேசியுள்ள தோனி அவர் டி 20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது பேச்ச்சில் “பதீரனா இலங்கை அணியின் சொத்து. அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிக விளையாடக் கூடிய நபர் இல்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கூட அவர் ஒருநாள் போட்டிகள் பக்கம் செல்லக் கூடாது” எனக் கூறியுள்ளார்.