இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவராக கருதப்படும் நியுசிலாந்து அணியின் டெவன் கான்வே காயம் காரணமாக இப்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளாராம். அதனால் அவர் தொடர்ந்து 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். அதனால் அவர் மே மாதம்தான் சி எஸ் கே அணியில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இதனால் சி எஸ் கே அணி அவருக்கு பதில் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.