சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகையை பார்க்க சென்று அதில் உள்ள பள்ளத்தாக்கில் சிக்கிக் கொண்ட நண்பனை மீட்க சக நண்பர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை படமாக்கியிருந்தார்கள். நட்பையும், அன்பையும் சிறப்பாக காட்சிப்படுத்திய இந்த படம் தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே பெற்ற த்ரில்லிங் வெற்றி காட்சிகளும், அதை வீட்டிலிருந்து கண்டு ஆனந்த கண்ணீர் விட்ட ரசிகர்களின் காட்சிகளையும் தொகுத்து வெளியாகியுள்ள அந்த வீடியோ சிஎஸ்கே ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. அதில் “அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா?” என்ற இடத்தில் தோனி நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.