உலக கோப்பை தொடருக்கு பிற்கு நீண்ட நாட்கள் கழித்து வந்த தோனியை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மீதமுள்ள ஆட்டங்களில் சிஎஸ்கே தனது வெற்றியை நிரூபித்தால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு சிஎஸ்கே தனது ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது. அதில் “மற்றொரு இலக்கை எட்டவோ புதிய கனவுகளை காணவோ இன்னும் அவகாசம் இருக்கிறது” என தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த சுற்றில் சிஎஸ்கே வீறுகொண்டு செயல்பட்டு தரவரிசையில் தனக்கான இடத்தை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.