சல்லி சல்லியா நொறுங்கிய ராயல்ஸ் வியூகம்! – நைட் ரைடர்ஸ் வெல்ல இதுதான் காரணம்!

வியாழன், 1 அக்டோபர் 2020 (10:35 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. கடந்த ஆட்டங்களில் நைட் ரைடர்ஸ் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என்பதாலும், நைட் ரைடர்ஸ் பவுலர்களை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்ற் நம்பிக்கையிலும் ராயல்ஸ் இரண்டாவதாக பேட்டிங் செய்ய திட்டமிட்டது.

முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணியினர் அதிகளவு ரன்களை குவிக்கவில்லை. அதிகபட்சமே சுப்மன் கில் எடுத்த 47 ரன்கள்தான். மொத்தமாக 174 ரன்கள்தான் எனும்பொது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அது எட்டக்கூடிய எளிய இலக்காகவே பட்டது.

இரண்டாவதாக களம் இறங்கிய ராயல்ஸின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித், சாம்சன் உள்ளிட்டவர்கள் முதல் நான்கு ஓவருக்குள்ளேயே ஆட்டமிழந்தது அதிர்ச்சியை அளித்தது. மீதமிருந்த நம்பிக்கையான உத்தப்பா, ஜாஸ் பட்லர் விக்கெட்டுகளும் ஏழு ஓவர்களுக்குள்ளாக காலியானது. நான்கு பேருமே பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனார்கள். யாரும் பெரிதாக விளையாடாத நிலையில் டாம் குர்ரனின் 54 ரன்கள் மட்டுமே ஆறுதலாக அமைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் முன்பு விளையாடிய சார்ஜா மைதானத்தை விட துபாய் மைதானம் பெரியது. இதை முன்னரே கணித்த நைட் ரைடர்ஸ் சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடிப்பதை விட ஓடி ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தினர். இதனால் ராயல்ஸின் வியூகமும் நைட் ரைடர்ஸிடம் தவிடுபொடியாகி 137 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்