ஓய்வு பற்றி பேசியுள்ள கெய்ல் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து நான் இப்போது ஓய்வு பெறப்போவதில்லை. இந்த உலகக்கோப்பை எனக்கு மிக மோசமானதாக அமைந்தது. நிர்வாகிகள் வாய்ப்பளித்தால் இன்னும் ஒரு உலகக் கோப்பை தொடர் கூட விளையாடுவேன். ஆனால் நிர்வாகிகள் அதை செய்வார்கள் என நான் நினைக்கவில்லை. முதல் போட்டியின் போதே எனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. ஆனால் நான் அங்கு செல்லாமல் போட்டியில் கவனம் செலுத்தினேன். எனக் கூறியுள்ளார்.