வருகிற நவம்பர் மாதம், இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள வங்க தேச அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இப்போட்டிகளில் டி20 தொடர் நவம்பர் 3 முதல் 10 வரை நடைபெறுகிறது.
இது குறித்து கூடிய விரைவில் கலந்தாலோசித்து பதில் அளிக்கப்படும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இரண்டு போட்டிகளில் முதல் போட்டி இந்தூரிலும், இரண்டாவது கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பகலிரவு ஆட்டம் பிசிசிஐ முடிவின் படி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றால், இந்தியாவின் முதல் டெஸ்ட் பகலிரவு போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.