கடந்த சில வாரங்களாக நடந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி முதல் முதலாக கோப்பையைக் கைப்பற்றியது. இந்நிலையில் அவர் பற்றி பேசியுள்ள மற்றொரு தமிழக வீரரான பாபா அபாரஜித் “நான் எப்போதுமே அவரைக் கேப்டனாகப் பார்க்க ஆசைப்பட்டேன். அவர் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட்டர். அவர் எப்போதுமே ஒரு பேட்டர் அல்லது பவுலர் என்று மட்டும் யோசிக்காமல் அதையும் தாண்டி யோசிக்கக் கூடியவர். அவருக்கு எல்லாவிதமான தலைமைக் குணங்களும் உள்ளன. அவருக்கு எப்போதும் கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது.” எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரிலும் ஆரம்பத்தில் சென்னை அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் பல அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஏலத்தில் அவர் சி எஸ் கே அணிக்கு மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.