சிட்னி டெஸ்டில் அஸ்வினை சேர்ப்பது குறித்து ஆலோசனை!

புதன், 2 ஜனவரி 2019 (17:36 IST)
சிட்னி டெஸ்ட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


 
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வென்று 2-1 என்ற நிலையில் முன்னிலையில் இருக்கிறது.
 
இந்த டெஸ்ட்  போட்டியில் எப்படியாவது வென்று தொடரை சமன் செய்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு  தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 
அதற்கு ஏற்றவாறு , இந்திய அணியும் எப்படியாவது  இந்த டெஸ்ட் போட்டியில் வென்றுவிட வேண்டும், இல்லையென்றால் குறைந்தபட்சம் டிரா செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக இருக்கிறது.
 
நாளை தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இதில் கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாகப் பந்து வீசி 11 விக்கெட்டுகளை வீழ்த்திய இசாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
 
இந்த தொடரில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.  அஸ்வின் உடற்தகுதியில் இன்னும் முழுமையாகத் தேர்வாகவில்லை என்பதால், நாளை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
13 பேர் கொண்ட அணியில் அஸ்வின் பெயர் இடம் பெற்றபோதிலும், அவர் கடைசி நேரத்தில்தான் அவர் விளையாடுவரா அல்லது ஓய்வில் அமரவைக்கப்படுவாரா என்பது பின்னர் தெரியவரும்.
 
இந்திய அணியின் விவரம்:
 
விராட் கோலி(கேப்டன்), ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், சட்டேஸ்வர் புஜாரா, அஜின்கஹே ரஹானே, ரிஷாப் பந்த், கே.எல்.ராகுல், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்