டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!

புதன், 13 ஜூன் 2018 (18:01 IST)
லண்டனில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்கிறது.
 
இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி சற்று முன் லண்டனில் தொங்கியது.
 
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்களில் 1 வீக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.
 
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற பிறகு ஆஸ்திரேலிய் அணி விளையாடும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்