அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியின் வீரர்கள் இங்கிலாந்து அணியினர் பந்துவீச்சை மைதானத்தின் நாளாபுறமும் சிதறடித்தனர். இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மெக்லியோட் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிளன்கெட் மற்றும் ரஷீத் தலா 2 வீக்கெட்டுகளை கைப்பற்றினர்.
372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் பேர்ஸ்டோவ் மற்றும் ஹேல்ஸ் வீக்கெட்டுகளை இழந்த பின் அந்த அணி தடுமாறியது. இந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திய ஸ்காட்லாந்து அணி பவுலர்கள் அந்த அணியினருக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனாலும், 8வது வீக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மோயீன் அலி மற்றும் பிளன்கெட் சிறப்பாக விளையாடியும் இறுதியில் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்கள் எடுத்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக பேர்ஸ்டோவ் 105 ரன்கள் எடுத்தார்.