இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 1 ரன்கள், மந்தனா 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.
131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி 26 ரன்னும், பெத் மூனி 20 ரன்னும் எடுத்த நிலையில், தொடர்ந்து களமிறங்கிய தஹிலா 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 34 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் அபார வெற்றி பெற்றது.