ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி; 90 சதவீதம் மழை வாய்ப்பு! – மழை பெய்தால் என்ன நடக்கும்?

ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (11:38 IST)
இன்று ஆசியக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிகள் நடைபெற உள்ள நிலை மழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, இலங்கை அணிகள் இடம்பெற்ற நிலையில் அதிலிருந்து இறுதி போட்டிக்கு இந்தியா – இலங்கை அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இலங்கை அணியில் வல்லாலாகே, ஹசரங்கா என கனமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நடப்பு சாம்பியனான இலங்கை இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணியின் ஃபார்மும் சிறப்பாகவே உள்ளது. இதனால் கோப்பை யாருக்கு என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆசியக்கோப்பை தொடங்கியது முதலே பெரும் இடர்பாடாக மழை இருந்து வருகிறது. முன்னதாக நடந்த இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – இலங்கை போட்டிகளிலும் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இந்நிலையில் இறுதி போட்டி நடக்கும் இன்றும் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஒருவேளை இன்று மழை பெய்தால் ஆட்டம் ரிசர்வ் டேவான நாளைக்கு ஒத்தி வைக்கப்படும். இன்று முடிந்த இடத்திலிருந்து நாளை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் இன்று மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும், வேண்டுதலாகவும் உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்