''அடிலெய்ட் ''வரலாற்று விதியை மாற்றி எழுதிய இங்கிலாந்து !

வியாழன், 10 நவம்பர் 2022 (16:59 IST)
இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஒரு புதிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில்,  20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்து, இங்கிலாந்திற்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி காட்டினர்.

எனவே, வெறும் 16 ஓவர்களில், இங்கிலாந்து அணி 170 ரன்கள் அடித்து சூப்பர் வெற்றி பெற்றது. இதில், அலெக்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும், ஜோஸ் 49 பந்துகளில்  80  ரன்களும் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்த நிலையில்,'' அடிலெய்ட் மைதானத்தில்  11 முறை நடந்துள்ள டி-20 போட்டிகளில் டாஸ் வென்ற அணி ஒருமுறை கூட போட்டியை வென்றதில்லை என்ற வரலாறு நீடித்து வந்த நிலையில், இதை இன்று இங்கிலாந்து அணி முறியடித்துள்ளது.''

இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி. சிறப்பாக விளையாடி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ALSO READ: டி- 20 உலக கோப்பை: ஜோஸ் - அலெக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து வெற்றி! இறுதிப் போட்டிக்குத் தகுதி!
 
இதேபோல், இங்கிலாந்து அணி அடுத்து வரும் நவம்பர் 13 ஆம் தேதி நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு ஜெயிக்குமா? என  ரசிகர்கள் ஆவலுடன் கார்த்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் சம பலம் கொண்டு வீரர்களும் புல்ஃபார்மில் இருப்பதால், அன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்