சமந்தாவை அழவைத்த விராட் கோலி.. அவரே பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு!

சனி, 13 மே 2023 (11:14 IST)
நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி மற்றும் சிட்டாடல் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இதற்கிடையில் சம்ந்தா மையோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சிகிச்சைக்குப் பின்னர் மீண்டுவந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் “நீண்ட நாட்களுக்குப் பிறகு கோலி, சதமடித்த போது நான் கிட்டத்தட்ட அழுதுவிட்டேன். அவர் எப்போதுமே உத்வேகம் அளிப்பவர்” எனக் கூறியுள்ளார். சமந்தாவைப் போலவே கடந்த சில ஆண்டுகளாக கோலி பார்மின்றி போராடி, இப்போது மீண்டும் பழைய ரன்மெஷின் கோலியாக மாறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்