தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

vinoth

திங்கள், 24 ஜூன் 2024 (15:49 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சூப்பர் 8 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று நடந்த ஒரு போட்டி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த நிலையில் இதில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வழக்கமாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சொதப்பும் தென்னாப்பிரிக்கா இந்த முறை ஒரு போட்டியைக் கூட தோற்காமல் சிறப்பாக விளையாடியுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியின் இந்த வெற்றிகள் குறித்து பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் “தென்னாப்பிரிக்கா அணி இன்னும் முழுமையாக தங்கள் திறமையை வெளிக்காட்டவில்லை. ஆனால் அரையிறுதிக்குள் சென்றுள்ளார்கள். கோப்பைக்கு அருகில் உள்ளனர். அவர்களின் சிறந்த ஆட்டத்தை இனிமேல்தான் காணப்போகிறோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்