மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

Mahendran

திங்கள், 24 ஜூன் 2024 (11:11 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சூப்பர் 8 போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.
 
இந்த நிலையில் இன்று நடந்த ஒரு போட்டி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த நிலையில் இதில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது 
 
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா அணி விளையாடும் போது மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களில் இரு 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
 
ஆனால் அந்த அணி 5 பந்துகள் மீதம் இருக்கையில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.  சூப்பர் 8 போட்டிகளில் இன்னும் இந்தியா - ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் ஆகிய இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளது என்பதும் அதன் பிறகு ஜூன் 27, 28 ஆகிய நாட்களில்  முதல் செமி பைனல் போட்டிகள் நடக்கும் என்பதும் ஜூன் 29ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்