தனது காதலியை விளையாட்டை பார்க்க அழைத்து வந்திருக்கிறார் ஒருவர். மைதானத்தில் வைத்து அந்த பெண்ணிடம் தன் காதலை தெரிவித்து கையில் மோதிரத்தை மாட்டிவிடுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் தன் காதலனை தாவி கட்டியணைத்து முத்தமிடுகிறார். இதை அங்கே கிரிக்கெட் ஆட்டத்தை வீடியொ எடுத்த கேமராமேனும் தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார்.