இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இரு அணிகளும் விக்கெட்களை மளமளவென இழந்து தடுமாறி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 153 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக இந்திய வீரர் கோலி 46 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் 7 பேர் டக் அவுட் ஆனார்கள். டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி நடைபெற்று வரும் 147 ஆண்டுகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனது நேற்றுதான். இந்த மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.