மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் போட்டியிட்டு வந்த நிலையில் இறுதி போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தகுதி பெற்றன.
தற்போது நடைபெற்று வரும் இறுதி போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மெக் லேனிங், ஷபாலி வெர்மா பார்ட்னர்ஷிப் 7வது ஓவர் வரை நின்று சிறப்பாக விளையாடி வந்தனர். ஷபாலி வெர்மா 27 பந்துகளில் 44 ரன்களை அடித்து அரை சதம் நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நிலையில் சோஃபி மொலினிக்ஸின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவருக்கு பின் களமிறங்கிய ஜெமியா ரோட்ரிகஸ், ஆலிஸ் கேப்சியையும் ஒரு ரன்கள் கூட அடிக்க விடாமல் அடுத்தடுத்த பந்துகளில் சோஃபி மொலினிக்ஸ் டக் அவுட் செய்தார். இதனால் தற்போது 10 ஓவர்கள் முடிவில் டெல்லியின் ஸ்கோர் 72 ரன்களாக உள்ளது. தொடர்ந்து இவ்வாறு அதிரடி காட்டினால் 140-150 ரன்களுக்குள் டெல்லியை ஆர்சிபி அணி கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.