ரோஹித் ஷர்மா 83 ரன்களும், கில் 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் மூன்றாவது இறங்கிய இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி, அதிரடியாக விளையாடி சதமடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவரின் 45 ஆவது சதமாகும். இந்தியாவில் அவர் அடித்த 20 ஆவது சதமாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.