சுஷாந்த் சிங் ’’கடவுளின் குழந்தை ‘’ - சுஷாந்த்சிங் சகோதரி உருக்கம்

புதன், 24 மார்ச் 2021 (18:56 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துப் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்தாண்ண்டு மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இவரது மரணம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த்தை கெளவிப்பதற்காக ஆஸ்திரேலேவியாவில் ஒரு பெஞ்சிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுஷாந்தின் தங்கை அவரைப் நினைவுகூர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,சுஷாந்த் சிங் வாழ்கிறார். அவரது பெயர் வாழ்கிறது. தூய ஆன்மாவின் தாக்கம் என்பது இதுவே, நீங்கள் கடவுளுடைய குழந்தை;  என் குழந்தை நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள்…மேலும் சுஷாந்த் ஒரு வானியலாளர், சிறந்த மனிதாபிமானி எனத் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்