கடந்த ஆண்டு இந்தியாவில் கொரொனா தொற்று பரவிய போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பவும், வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்கள் தாய் நாட்டிற்கு திரும்பவும், விவசாயிகள், ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் சோனு சூட். இவரது சேவையைப் பாராட்டி அவருக்கு ஐநா விருது அளித்தது.
இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் மும்பை இல்லத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் அவரது லாப நோக்கமற்ற தொண்டு அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை சேகரித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை அதில் ரூ.1.9 கோடி நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது, மீதமுள்ள ரூ.17 கோடி லாப நோக்கற்ற வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் அவரது மொத்த வரி ஏய்ப்பு ரூ.20 கோடியை விட அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.