ஓட்டல் விவகாரம்...நடிகர் சோனு சூட்டிற்கு நோட்டீஸ்

சனி, 17 ஜூலை 2021 (23:50 IST)
தனது 6 மாடி அடுக்குமாடி குடியிருப்பை ஹோட்டலாக மாற்றியதற்கு அனுமதி பெறவில்லை எனக் கூறி சோனு சூட்டிற்உ நோட்டீஸ் அனுப்பபப்ட்டுள்ளது
.

கடந்த ஆண்டு கொரொனா கால ஊரடங்கின்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வர விமான உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் பேருந்து வசதி, தொழிலாளர்களுக்கு உதவி, விவசாயிகளுக்கு டிராக்டர், மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எனத் தொடர்ந்து உதவி செய்யும் நடிகர் சோனு சூட்டை கடவுள் என்று அவரது ரசிகர்களும் மக்களும் வணங்கி வருகின்றனர்.

அவரது சமூக சேவைக்கு ஐநா விருது வழங்கிக் கவுரவித்துள்ளது,. அத்துடன் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஜூகு பகுதியில் உள்ள தனது 6 மாடி குடியிருப்பை ஓட்டலாக மாற்றியதாகக் குற்றம்சாட்டி மும்பை மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை எதிர்த்து நடிகர் சோனு சூட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் இது தள்ளுபடியானது.  பின்னர் மும்பை உயர்நீதிமன்றல் அவர் மனுதாக்கல்  செய்தார் அதுவும் தள்ளுபடி ஆனது.இந்நிலையில் ஓட்டலாக மாற்றிய குடியிருப்பை 2 வார காலத்திற்குள் மீண்டும் அடுக்குமாடி குடியிருப்பாக மாற வேண்டுமென எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்