கடந்த ஆண்டு கொரொனா கால ஊரடங்கின்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வர விமான உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் பேருந்து வசதி, தொழிலாளர்களுக்கு உதவி, விவசாயிகளுக்கு டிராக்டர், மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எனத் தொடர்ந்து உதவி செய்யும் நடிகர் சோனு சூட்டை கடவுள் என்று அவரது ரசிகர்களும் மக்களும் வணங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த தம்பதிக்கு பிறக்கும்போதே உடல் நலக் கோளாறுடன் குழந்தை பிறந்தது. குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்தார். இதனையடுத்து, அந்தத் தம்பதி தங்களின் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய சோனுசூட்டின் பெயரை தமது குழந்தைக்குச் சூட்டி நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.