காட் ஃபாதர் இன்ஸ்பிரேஷனில் ராம் கோபால் வர்மா எடுத்த சர்க்கார் அவர் இயக்கிய மிகச்சிறந்த படங்களில் ஒன்று. இதில் சர்க்காராக அமிதாப்பச்சன் நடித்திருந்தார். இதன் இரண்டாம் பாகம் சர்க்கார்ராஜ் என்ற பெயரில் வெளியானது. இதில் அமிதாப்பின் மகனாக அமிதாப் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராயும் முக்கிய வேடமேற்றிருந்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்க்கார் 3 படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். அமிதாப் நாயகன். ஜாக்கி ஷெராப், மனோஜ் பாஜ்பாய், யாமி கௌதம் என்று முற்றிலும் புதிய காஸ்டிங்.