ஹிந்தியில் ரீமேக் ஆகிறது ‘ஜிகர்தண்டா’

சனி, 14 அக்டோபர் 2017 (13:48 IST)
சித்தார்த் நடிப்பில் வெளியான ‘ஜிகர்தண்டா’ படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

 
சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன், குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. கார்த்திக்  சுப்பராஜ் இயக்கிய இந்தப் படம், கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீஸானது. இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததோடு, சிறந்த எடிட்டிங்கிற்காக விவேக் ஹர்ஷனுக்கும் தேசிய விருது கிடைத்தது.
 
இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படம், ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள சஞ்சய் தத், பாபி சிம்ஹா கேரக்டரில் நடிக்கிறார். சித்தார்த் கேரக்டரில் நடிக்க பர்ஹான் அக்தரிடம் பேசி  வருகிறார்கள். நிஷிகாந்த் கமட் இந்தப் படத்தை இயக்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்