டெல்லியைச் சேர்ந்த பொண்ணு நான். 2008ல் படிப்பு முடிந்ததும் சினிமாவில் நடிக்கணும்ங்கிற கனவோட மும்பை வந்தேன். 2012ல் அனுராக் காஷ்யப் இயக்கத்தில ‘கேங்ஸ் ஆஃப் வாசிபூர்’ படத்துல் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த படத்ததின் மூலம் பிலிம் பேரின் ‘சிறந்த புதுமுக நடிகை’ விருது கிடைச்சுச்சு. தென்னிந்தியாவில் என்னுடைய முதல் படம் மம்முட்டி சாருடன் நடிச்ச ‘வொயிட்’ தான். நான். ‘வைசிராய்ஸ் ஹவுஸ்’ங்கிற ஆங்கிலப் படத்திலும் நடிச்சிருக்கேன்.”
மொழி என்னைக்குமே நடிப்புக்குத் தடையா இருந்ததில்லை. ரஞ்சித் சாரும், ரஜினி சாரும் சேர்ந்து எனக்குத் தமிழ் கத்துக்கொடுத்தாங்க. மம்மூட்டி சாருடன் வேலை பார்க்கும்போது, அவர் எனக்கு மலையாளம் கத்துக்கொடுத்தார். நிறைய மொழிகளைக் கத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பதான் சரிவர உணர்ச்சிகளைத் திரையில் வெளிப்படுத்த முடியும்.
இந்தியில ஒரு நடிகைன்னா தோல் நிறத்துல ஆரம்பிச்சு உயரம் வரைக்கும் ‘இப்படித்தான் இருக்கணும்’னு நிறைய விதிமுறைகள் இருக்கு. ஆனா, தமிழ் சினிமா அப்படி இல்லை. நிஜ கதாபாத்திரங்களைத் திரையில காட்டணும்னு நெனைக்கிறாங்க. அதனாலதான் வர்த்தக நோக்கத்தையும் தாண்டி, தென்னிந்திய சினிமா ஒரு படி மேல இருக்கு. அந்த வகையில் நயன்தாரா ரொம்பப் பிடிக்கும். இவ்வாறு கூறினார்.