ஷ்ரத்தா படுகொலையை திரித்து டிவி சீரியல்? – சோனி டிவியை புறக்கணிக்க ட்ரெண்டிங்!

ஞாயிறு, 1 ஜனவரி 2023 (13:21 IST)
சமீபத்தில் தேசத்தையே அதிர வைத்த ஷ்ரத்தா படுகொலை சம்பவத்தின் உண்மை நிலவரத்தை திரித்து காட்டியதாக சோனி டிவிக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்த அவரது காதலனான அஃப்தாப் என்ற இளைஞரே கொன்று பல துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தி தொலைக்காட்சியான சோனி டிவியில் உண்மையான குற்ற நிகழ்வுகளை மையப்படுத்தி ‘க்ரைம் பாட்ரல் 2.0’ என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஷ்ரத்தா படுகொலை சம்பவத்தை மையப்படுத்தி சமீபத்தில் கதை ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. அதில் கொலையாளியின் பெயரை இந்து பெயராகவும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயரை கிறிஸ்தவ பெயராகவும் மாற்றியிருந்ததாக கூறப்படுகிறது.

உண்மையை திரிக்கும் வகையில் சோனியின் இந்த தொடர் உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சோனி தொலைக்காட்சியை புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் ட்ரெண்டிங்குகளும் வைரலாகி வருகின்றன.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்