அதில் அவர் கூறியிருப்பது, நான் 2004ம் வருடம் கிராசிம் மிஸ்டர் இந்தியா மாடலாக தேர்வானேன். அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து பட வாய்பிற்காக தயாரிப்பாளர் முஸ்தாக் ஷேக்கை சந்தித்தேன். அப்போது அவர் என்னை பார்த்து இம்பிரஸ் ஆனார்.
பிறகு ஒரு நாள் இரவு 11 மணிக்கு என்னை அவர் வீட்டிற்கு அழைத்தார். அங்கு அவர் வீட்டில் ஒரேயொரு அறை, படுக்கை மட்டுமே இருந்தது. அப்போது நான் உனக்கு ஒன்று செய்யப் போகிறேன் என்று சொல்லி அதில் நீ மிகுந்த சந்தோஷம் அடைவாய் என்றார். அதை கேட்டு எனக்கு பயம் வந்துவிட்டது. நான் உங்களின் நண்பன். எல்லா உறவுகளும் செக்ஸை அடிப்படையாக கொண்டது இல்லை என்று நான் கூறினேன். அதற்கு அவரோ, அடுத்த முறை நீ தயாராகிவிடுவாய் என்றார். அதன் பிறகு அந்த பட வாய்ப்பையே நான் இழக்க நேரிட்டது.