பிரமாண்ட சாதனை படைத்த பிகில் - கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்!

சனி, 31 ஆகஸ்ட் 2019 (11:27 IST)
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 


 
இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருப்பதால் படக்குழுவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். 
 
அண்மையில் தான் விஜய்யின் பிகில் டீசர் சென்சார் முடிந்துவிட்டதாகவும், படு மாஸாக டீசர் வந்திருப்பதாகவும் பிரபலம் ஒருவர் டுவிட் போட்டு தெரிவித்திருந்தார். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், பிகில் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமைகள் இதுவரை எந்த படங்களும் செய்யாத அளவுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம். மேலும் மற்ற இடங்களிலும் இப்படத்தை அதிக தொகைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக முன்வந்திருக்கிறார்களாம் . படம் ரூ 300 கோடி வசூலை எட்டி சர்கார் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்