கடந்த வருடம் நடைபெற்ற அடுத்தடுத்த ராஜரீக நடவடிக்கைகளால் சற்று தடுமாறியிருந்த கிம்மிற்கு உத்வேகமளிக்கக்கூடிய ஒரு சந்திப்பாக இது அமையும். இருநாட்டு தலைவர்களும் அணு ஆயுத பயன்பாடு தொடர்பாக தடைபெற்ற பேச்சுவார்த்தை, ஹனாய் சந்திப்பு தோல்வியில் முடிந்தது ஆகியவை குறித்து ஆலோசிப்பார்கள்.
ஷி ஜின்பிங் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவார் என்றும், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க ஏதேனும் வழிவுள்ளதா என்றும் ஜப்பானில் டிரம்பை சந்திக்கும்போது பேசுவதற்கான தகவல்கள் ஆகியவை குறித்தும் ஷி ஜின்பிங் தெரிந்து கொள்ள நினைப்பார் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.