18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருவதாகவும், இது பத்து ஆண்டுகளுக்கு முன், இளம் நோயாளிகளிடம் இல்லாத ஒன்று என்றும் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்ந்த ஏங்கெல்லா கிரகோரி தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில், ஆணுறுப்பு விறைப்பு செயலின்மை பிரச்சினை காரணமாக மருத்துவமனைகளுக்கு வந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள், நீரிழிவு நோய், மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் உடல் இயக்கத் திறனை குறைக்கும் நோய் அல்லது இதய பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட வயதான ஆண்கள்தாம்.
இணையவழி மூலம் ஆபாசப் படங்களை பார்க்கக் கூடிய வசதி இப்போது எளிதாகக் கிடைப்பது சில பாலியல் உறவுகளை சேதப்படுத்துகிறது.
இந்த விஷயத்தில், இளம் ஆண்களின் மூளைகள் நிஜ பெண்களை மறந்து கணினிகளில் பார்க்கக்கிடைக்கும் படங்களோடு ஒன்றிவிடுவதே அதற்கு காரணமாகும்.