காணொளிக் காட்சியை காணும் நேரத்தை மிகைப்படுத்தியதால் பேஸ்புக்கின் பங்குகள் வீழ்ச்சி

சனி, 24 செப்டம்பர் 2016 (08:31 IST)
பேஸ்புக் தனது இணையதளத்தில் பயன்பட்டாளர்கள் சராசரியாக காணொளிக் காட்சியை காணும் நேரத்தை மிகைப்படுத்தியது என்று ஒப்புக்கொண்ட பிறகு அதன் பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில், கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் வீழ்ந்தன.


 

 
விளம்பரதாரர்கள் தங்களது விளம்பரக் காணொளிக் காட்சி ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் பார்க்கப்பட்டது என்று கணக்கிட பேஸ்புக்கின் சொந்த மதிப்பீடுகள் தான் முக்கியமான கருவியாகும்.
 
மூன்று வினாடிகளுக்கு குறைவாக காணொளிக் காட்சியைப் பார்த்த பார்வையாளர்களை இந்த கணக்கீட்டு முறை சேர்க்கவில்லை. இதனால் சராசரி பார்வையாளர்கள் பார்த்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது.
 
ஒரு விளம்பரதாரர் பேஸ்புக்கின் புள்ளிவிவரங்கள் எண்பது சதவீதம் வரை கூடுதலாக மதிப்பிடப்பட்டது என்று கூறியுள்ளார் .

வெப்துனியாவைப் படிக்கவும்