ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா

புதன், 10 அக்டோபர் 2018 (13:37 IST)
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இரண்டு வருட பணிக் காலத்துக்கு பிறகு அவரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தனது அலுவலகத்தில் ஹேலியுடன் தோன்றி பேசிய டிரம்ப், " நிக்கி ஹேலி வியக்கத்தக்க பணியை ஆற்றியுள்ளார்" என தெரிவித்தார்.
 
தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் 46 வயது ஹேலி.
 
டிரம்ப் அமைச்சரவையில் இருக்கும் ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர். மேலும், ராஜிநாமாவுக்கான காரணத்தை ஹேலி தெரிவிக்கவில்லை.
 
அதே சமயம் 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாக எழுந்துள்ள ஊகங்களை மறுத்துள்ளார்.
 
நிக்கியின் ராஜினாமாவை அடுத்து அப்பதவிக்கான பெயரை ஒரு சில வாரங்களில் அறிவிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்