செங்கரடி என நினைத்து மனிதரை சுட்டுக்கொன்ற ரஷ்ய அரசியல்வாதி

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (12:25 IST)
செங்கரடி என நினைத்து ஆள் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்தை ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வர அரசியல்வாதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திலுள்ள ஒசேர்நோவ்ஸ்கை எனும் கிராமத்தில் இருக்கும் குப்பை குவியலில் செங்கரடி ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டேன் என்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் ஈகோர் ரெட்கின் எனினும் அந்த 55 வயது அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.
 
அந்தக் கரடியை அச்சுறுத்துவதற்காக அவர் குப்பைக் குவியலை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் சுடப்பட்ட பின்பு அந்த துப்பாக்கிச் சூட்டில் உள்ளூரை சேர்ந்த ஒருவர் காயமடைந்தது தமக்குத் தெரியவந்ததாக அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
30 வயதாகும் அந்த நபர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு தொடர்பாக கடந்த வாரம் குற்ற வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
 
தொழிலதிபர் ஈகோர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்யக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் மீது குற்ற விசாரணையை தொடங்கப்பட்ட பின்பு அவர் புதினின் கட்சியில் இருந்து விலகி உள்ளார.
 
ஈகோர் ரஷ்யாவில் உள்ள மிகவும் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படுகிறார். ஈகோர் மீதான வழக்கு விசாரணை நடந்து முடியும்வரை அவர் இரண்டு மாத காலத்துக்கு வீட்டுச் செடிகள் இருக்க வேண்டும் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்